குடும்ப உறுப்பினர்களை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற மருத்துவர்: சிக்கிய கடிதம்

Report Print Vijay Amburore in இந்தியா

பெங்களூரை சேர்ந்த மருத்துவர் தன்னுடைய தாய்க்கும், தங்கைக்கும் விஷம் வைத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சுப்பாரையா. இவர் தனது மனைவி மூகாம்பிகை (75) மற்றும் மகன் கோவிந்தா பிரகாஷ் (43) உடன் வசித்து வருகிறார்.

மருத்துவரான கோவிந்தப்பிரகாஷ்க்கு பல வருடங்களாக திருமணம் நடக்காமல் தள்ளிச்சென்றுள்ளது. அதேசமயம் மகள் ஷியாமலா (40) கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த மூகாம்பிகை ஒரு நாளைக்கு 4 மாத்திரைகளை வரை சாப்பிட்டு வந்துள்ளனர்.

மறுபுறம் அவர்களுடைய மகனும், மகளும் தீராத தலைவலியால் ஒரு நாளைக்கு 6 மாத்திரைகள் வரை சாப்பிட்டு வந்துள்ளனர்.

இந்த காரணங்களால் மனமுடைந்த மூவரும், வெள்ளிக்கிழமையன்று சுப்பாரையா இரவு தூங்கும் நேரத்தில் குறட்டை விடுவதாக பொய் கூறி தூக்க மாத்திரை கொடுத்துள்ளனர். அதன் பின்னர் மூவரும் சேர்ந்து கையெழுத்திட்டவாறு, 'எங்களுடைய இறப்பிற்கு யாரும் காரணமல்ல' என ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

மறுநாள் காலையில் விடிந்ததும் எழுந்த சுப்பாரையா, மூவரும் தரையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து மீட்ட்கப்பட்ட மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் மூகாம்பிகையும், ஷியாமளவும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என தெரிவித்துள்ளனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கோவிந்தாவை தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மருத்துவர் தன்னுடைய அம்மாவிற்கும், தங்கைக்கும் அதிகமான இன்சுலின் ஊசிபோட்டு கொன்ற பின்னர், தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers