மனைவியுடன் சேர்ந்து தகாத தொழில்! இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியது அம்பலம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மனைவியுடன் சேர்ந்து பாலியல் தொழில் நடத்தி வந்த நபர், இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் விசியானகரத்தை சேர்ந்தவர் பங்காரு சக்ரதர். இவர் தனது மனைவி லீலாவுடன் சேர்ந்து துணி வியாபாரம் செய்து வந்த நிலையில் பெண்களை வைத்து ரகசியமாக பாலியல் தொழிலும் செய்து வந்தார்.

இந்நிலையில் துணி வியாபாரம் தொடர்பாக பங்காரு கொல்கத்தாவுக்கு சென்ற நிலையில் அங்கு நிஷா என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

பின்னர் இருவரும் நட்பான நிலையில் தனக்கு திருமணமாகவில்லை என பொய் கூறியுள்ளார் பங்காரு.

இதன்பின்னர் இவர்களின் நட்பு காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டதன் விளைவாக நிஷா கர்ப்பமடைந்தார்.

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள பங்காருவை நிஷா வலியுறுத்தினார்.

அப்போது தான், தனக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளதாகவும், மனைவியுடன் சேர்ந்து பாலியல் தொழில் செய்து வருவதாகவும் பங்காரு கூறியுள்ளார்.

மேலும் தன்னுடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடவும் நிஷாவை வற்புறுத்தினார்.

இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியடைந்த நிஷா நேராக பொலிசாரிடம் சென்று அனைத்தையும் கூறி புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து பொலிசார் பங்காருவையும், அவர் மனைவி லீலாவையும் கைது செய்துள்ளனர்.

அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்