நாங்கள் இறப்பில் ஒன்று சேர்வோம்: ரயில்முன் காதலன் பாய்வதை பார்த்து வேகமாக குதித்த காதலி

Report Print Vijay Amburore in இந்தியா

ஜார்கண்ட் மாநிலத்தில் இளம்காதல் ஜோடி ஓடும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் சுப்பெல்லா ரயில்வே நிலையம் அருகே, இளம்காதல் ஜோடி அதிவேகமாக வந்த ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் போது, விக்ரம் யாதவ் (22) என்கிற இளைஞர் 17 வயது மட்டுமே ஆகியிருந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட காதல் ஜோடி, தங்களுடைய வீட்டில் கூறி அனுமதி கேட்டுள்ளனர். இதில் சிறுமி இன்னும் திருமண வயதை அடையாததால், சில நாட்கள் கழித்து திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என வீட்டில் கூறியுள்ளனர்.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத விக்ரம், பொய் கூறி பிரிக்க பார்ப்பதாக நினைத்து காதலியுடன் தற்கொலை செய்துள்ளார்.

இறப்பதற்கு முன்பாக உறவினர் ஒருவருக்கு வீடியோ கால் செய்த காதல் ஜோடி, நாங்கள் இருவரும் தற்போது ரயில்நிலையம் முன்பு நிற்கிறோம். எங்களால் சேர்ந்து வாழ முடியவில்லை என்றால் ஒன்றாக இறக்க முடியும் என கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த உறவினர், 18 வயது பூர்த்தியடைந்ததும் நிச்சயம் திருமணம் செய்து வைப்பார்கள் என விவரித்துள்ளார்.

இதனை அந்த சிறுமி ஏற்றுக்கொண்டார். ஆனால் விக்ரம் உடனடியாக ரயில்முன் பாய்ந்தான். அதனை பார்த்த அந்த சிறுமியும் சற்றும் யோசிக்காமல் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் என அந்த உறவினர் கூறியுள்ளார்.

தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers