இறந்ததாக கூறி இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்த குடும்பம்: அதன் பின்னர் நடந்த சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா
75Shares

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் மருத்துவர்களால் இறந்ததாக கூறி கைவிட்ட 17 வயது சிறுவன் உயிருடன் மீண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் ஐதராபாத் நகரில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள பானு மற்றும் ராஜேஷ் ஆகிய நண்பர்கள் இருவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் குடியிருப்புக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது எதிர்பாராத வகையில் இவர்களது இருசக்கர வாகனத்தை லொறி ஒன்று மோதிவிட்டு சென்றுள்ளது.

இதில் ராஜேஷ் லேசான காயங்களுடன் தப்பியுள்ள நிலையில் 17 வயதான பானு தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

புதனன்று பானுவின் குடும்பத்தாரை சந்தித்த மருத்துவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு சிகிச்சை அளித்ததாகவும்,

ஆனால் உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் கலங்கிய பானுவின் குடும்பத்தினர், உறவினர்களுக்கும் தெரிவித்து இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளும் மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே வியாழனன்று சடலத்தை பெற்றுக் கொள்ள பானுவின் குடும்பத்தார் மருத்துவமனை சென்ற போது, மருத்துவர்கள் அந்த வியப்பளிக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.

பானு உயிருடன் இருப்பதாகவும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் பானுவின் உறவினர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தாலும், மருத்துவர்களின் அலட்சியமே இந்த குளறுபடிக்கு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்