கணவனை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு நாடகாமடியது ஏன்? மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி, காவல்நிலையத்தில் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (50). சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார்.

இவருக்கு செண்பகவள்ளி (48) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கதிர்வேல் தான் செய்த வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு விழுப்புரத்தில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.

இதையடுத்து கடந்த 6-ஆம் திக்தி திடீரென்று இவர்கள் தங்கிய வீடு தீப்பிடித்து எரிந்தது. கதிர்வேல் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அதன் பின் விசாரணை மேற்கொண்டனர்.

முதலில் கதிர்வேல் மனைவி செண்பகவள்ளி இடப்பிரச்சனை தொடர்பாக என் கணவனை கொலை செய்துவிட்டதாக கூறி 5 பேரின் பெயரைக் கூறினார்.

இதனால் பொலிசார் அவர்கள் குறித்து விசாரித்த போது அன்றைய தினம் அந்த ஐந்து பேரும் உரிலே இல்லை என்பது தெரிய்வந்ததால், பொலிசாருக்கு செண்பக வள்ளி மீது சந்தேகம் வந்துள்ளது.

அவரிடம் பொலிசார் மேற்கொண்ட கிடுக்குப் பிடி விசாரணையில், என் கணவர் தனியார் கம்பெனி ஒன்றி வாட்ச் மேனாக வேலை பார்த்து வந்தார்.

மூன்று மாதத்திற்கு முன்பு அதிலிருந்து விலகியதால், அவருக்கு செட்டில்மேண்ட் தொகையாக 3 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

அந்த பணத்தை வைத்துக் கொண்டு அவர் தினந்தோறும், குடித்துவிட்டு வந்து என்னிடம் பிரச்சனை செய்து கொண்டிருந்தார்.

அதன் காரணமாக அவர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. இப்படி டார்ச்சர் செய்யும் நபரை கொன்றுவிடலாம் என்று முடிவு செய்தேன்

சம்பவ தினத்தன்று எப்போதும் போல் குடித்துவிட்டு வந்து என்னிடம் பிரச்சனை செய்தார். நிதானம் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்ததால், அப்போது வீட்டில் இருந்த மரம் வெட்டும் கத்தியை எடுத்து அவர் கழுத்துல ரெண்டு தடவை வேகமா வெட்டினேன். அதுல அவரு துடி துடித்து இறந்தார்.

அப்போது அவருடைய இத்தம் என் மேல் பீறிட்டு அடித்தது. இரத்தம் வழிந்து ஓடியதால், இந்த கொலையை மறைக்க ஒரு பிளான் செய்தேன்.

இந்த கொலையை யாரோ செய்த மாதிரி செய்துவிடலாம் என்பதற்காக, முதலில் தரையில் இருந்த ரத்தைத்தை ஈரத் துணியால் துடைத்து எடுத்தேன். அதன்பிறகு ரத்தக்கறை பட்ட என் புடவை, கத்தி போன்றவைகளை மறைத்ஹ்டு வைத்துவிட்டேன்.

அதன் பின் வீட்டுக்குப் பின்னால் சென்று நானே தீ வைச்சு வீட்டைக் கொளுத்தினேன். அதன் பின்னரே ஐயோ, என் வீட்டுக்காரரை கொலை பண்ணிவிட்டார்கள் என்று கத்தியதால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கணவனை வீட்டின் உள்ளே இருந்து வெளியே இழுத்து போட்டனர்.

வீட்டுப் பிரச்னை முன் விரோதத்தாலதான் விழுப்புரத்துக்காரங்க என் வீட்டுக்காரரை கொலை செய்துவிட்டார்கள் என்று அழுது புலம்பி அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்துவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers