தமிழர்கள் உட்பட 45 பேரை கொன்ற தீவிரவாதிக்கு பயிற்சி கொடுத்த சூத்திரதாரி இவன் தான்: முதல்முறையாக வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

காஷ்மீரில் தமிழர்கள் உட்பட 45 வீரர்களை கொன்ற தீவிரவாதி அடில் அகமதுக்கு, பயிற்சி கொடுத்ததோடு, இச்சம்பவத்துக்கு சூத்திரதாரியாக இருந்த தீவிரவாதி குறித்து தெரியவந்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் 2 ஆயிரத்து 547 பேர் ஜம்முவில் இருந்து, 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு கடந்த 14ஆம் திகதி சென்று கொண்டிருந்தனர்.

ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதி அடில் அகமது தர் (20) நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 45 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்நிலையில் அடில் அகமது இந்த தாக்குதலை நடத்த அவனுக்கு பயிற்சி கொடுத்தது கசி அப்துல் ரஷீத் என்ற தீவிரவாதி என்பது தெரியவந்துள்ளது.

ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாருக்கு மிகவும் நெருக்கமானவனாக இருப்பவன் தான் அப்துல் ரஷீத்.

கடந்த 2008-ல் இந்த இயக்கத்தில் சேர்ந்த 32 வயதான அப்துல் ரஷீத் ஆப்கானிஸ்தானில் தாலிபனால் பயிற்சி பெற்றவன்.

இவன் கடந்த டிசம்பர் மாதம் தான் காஷ்மீருக்கு வந்துள்ளான்.

பின்னர் அடில் அகமதுக்கு இந்திய பாதுகாப்பு படையினரை கொல்ல பயிற்சி கொடுத்துள்ளான்.

இதோடு கடந்த 2017 மற்றும் 2018-ல் ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் இரண்டு மருமகன்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அவர்களை பழிவாங்க காஷ்மீருக்கு அப்துல் ரஷீத்தை, மசூத் அனுப்பியுள்ளான்.

கைவினை வெடி குண்டுகளை கையாள்வதில் கில்லாடியான அப்துல் ரஷித் அதற்கான பயிற்சியை அடில் அகமதுக்கு கொடுத்துள்ளான் என தெரியவந்துள்ளது.

கடந்த 14ஆம் திகதி நடந்த தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னர் பாதுகாப்பு படையினர் அப்துல் ரஷீத்தை என்கவுண்டரில் கொல்ல முயன்று அவன் உயிர் தப்பியதும் தெரியவந்துள்ளது.

தற்போது அப்துல் ரஷீத் தெற்கு காஷ்மீரில் பதுங்கியிருப்பான் என நம்பப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்