தமிழகத்தை அதிர வைத்த பாலியல் வன்கொடுமை வழக்கு! கைதான 4 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

Report Print Raju Raju in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த கும்பலை சேர்ந்த சபரி, வசந்த குமார், சதீஷ் குமார், திருநாவுக்கரசு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முதலில் உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து சதீஷ், சபராஜன், வசந்தகுமார் ஆகியோரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers