கணவரை இழந்த மகளின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த தந்தை! துடி துடிக்க கொலை செய்ததன் பிண்ணனி காரணம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் சொந்த மகளையே தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு பகுதியை சேர்ந்தவர் கணேசன்.

இவருக்கு ஆனந்தி என்ற மகள் உள்ளார். திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் ஆனந்தியின் கணவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய 2 பிள்ளைகளுடன் வசித்து வந்த ஆனந்திக்கும், அவருடன் வேலை பார்த்து வரும் நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் இந்த பழக்கம் நாளைடைவில் மிகவும் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ஆனந்தியின் தந்தை, ஆனந்தியை பல முறை கண்டித்துள்ளார்.

ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் சாந்தி இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து நேற்றிரவு இது தொடர்பாக ஆனந்தியிடம் தந்தை கணேசன் பேசிய போது, இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் வாக்குவாதம் முற்றியதால், கோபத்தின் உச்சிக்கு சென்ற கணேசன், அருகில் இருந்த கயிற்றை எடுத்து மகளின் கழுத்தை நெரித்து துடி துடிக்க கொலை செய்துள்ளார்.

அதன் பின் இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, விரைந்து வந்த பொலிசார் ஆனந்தியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தந்தை கணேசனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்