100 கிலோ போதைப்பொருள்.. இந்திய கடறப்படையிடம் வசமாக சிக்கிய பாகிஸ்தான்

Report Print Basu in இந்தியா

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தான் மீன் பிடி கப்பலை, இந்திய கடலோர காவல்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

குஜராத் கடற்பரப்பில் வைத்து 100 கிலோ போதைப்பொருளுடன் வந்த பாகிஸ்தான் மீன் பிடி கப்பல் சிக்கியுள்ளது. சம்பவம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்திய கடற்பரப்பில் கப்பல் மூலம் போதைபொருள் கடத்தப்படுவதாக உளவுத்துறையிடமிருந்து தகவல் கிடைத்தது.

சந்தேகத்திற்குரிய கப்பலை தேடும் பணியில் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் வானூர்திகள் ஈடுபட்டன. சர்வதேச கடல் எல்லைக்குட்பட்ட இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றுக்கொண்டிருந்த பாகிஸ்தான் மீன் பிடி கப்பலை தடுத்து சோதனை செய்யப்பட்டது.

அதிலிருந்து 194 பாக்கெட்டு போதைப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றச்செயலில் ஈடுபட்ட கப்பல், தற்போது ஜாகு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers