இனி கல்யாணமா நடத்த முடியும்? தமிழகத்தில் கோரமாக சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்னோலின் தாயின் கண்ணீர் வார்த்தைகள்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, மகளை பறிகொடுத்த தாய், நினைவஞ்சலிக்கு பொலிசாரையும் அழைத்துள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இதே திகதி தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது நடந்த போராட்டத்தின் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஸ்னோலின் என்ற 18 வயது இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.

துப்பாக்கிச்சூட்டில் ஸ்னோலின் கோரமாக வாயில் சுடப்பட்டு இறந்தார். போராட்டத்தில் இறந்த 13 நபர்களில் இளவயது நபர் இவர்தான்.

இன்றோடு ஓராண்டு ஆவதால், அவரின் குடும்பத்தினரிடம் பிரபல தமிழ் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது.

அப்போது, அவரின் வீட்டின் உள்ளே ஸ்னோலினின் வீட்டின் உள்ளே அவரின் புகைப்படங்களே அதிகமாக இருந்துள்ளன.

அதுமட்டுமின்றி முதலாமாண்டு நினைவேந்தலுக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் வீட்டுக்காக 2000ல் பிறந்த ஸ்னோலின் நாட்டுக்காக 2018-ல் மறைந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவரின் தாய் வனிதா, இனி என் மகளுக்கு கல்யாணமா நடத்த முடியும்? முதலாமாண்டு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைத்துள்ளேன்.

என் மகளை நினைத்து பலரும் கண்ணீர்விட்டு அழுதிருக்காங்க, அது எனக்கு தெரியும். இந்த முதலாமாண்டு நிகழ்ச்சிக்கு பொலிசார் மற்றும் அதிகாரிகளையும் அழைத்துள்ளேன்.

அவர்களை மன்னித்துவிட்டேன், அன்பு மட்டும் தான் நிஜம் என்று என் மகள் சொல்லிக் கொண்டே இருப்பாள், அதன் காரணமாகவே, அவளுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்கிறேன்.

என் அருகில் அவள் படுத்துக்கொள்வாள். நிறைய பேசுவாள். விதவிதமான கனவுகளை சொல்லுவாள். குடும்ப உறுப்பினர்கள் மீது வைத்துள்ள அன்பு போலவே அவளது நண்பர்களிடமும் அன்பு. எல்லோருக்கும் உதவவேண்டும் என எண்ணம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முன்னர் நடந்த போராட்டங்களை பார்த்துவிட்டு, வீட்டில் எல்லோரிடமும் பேசுவாள்.

புற்றுநோயால் இறந்த கணவர், குழந்தைகளை பற்றி இளம்பெண்கள் பேசிய உரைகளை கேட்ட ஸ்னோலின் நம் வீட்டில் இதுபோல நடந்தால் அமைதியாக இருப்போமா? என பேசுவாள். போராட்டத்திற்கு கண்டிப்பாக போகவேண்டும் என முடிவுசெய்தாள், அதன் படி போராட்டத்திற்கு சென்றால், இறந்து தான் வீட்டிற்கு வந்தாள் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

அவளது இழப்பை ஈடுகட்ட முடியாது. எல்லோரும் ஆறுதல் சொல்வார்கள். இழப்பின் வலி எனக்குதான் அதிகம்'.

அவள் இறந்த பின்பு ஒரே விஷயம் மட்டும் தான் மாறியிருக்கிறது. முன்பு எல்லாம் எதையும் அதிக அளவில் தெரிந்து கொள்ள மாட்டேன்.

ஆனால் இப்போது எல்லா செய்திகளையும் பார்க்கிறேன். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்கவேண்டும் என கற்றுக்கொடுத்துவிட்டாள் என் மகள்.

என்னை சந்திக்க எத்தனையோ பேர் வருகிறார்கள். என் மகளைப் பற்றி பேசுகிறார்கள். அவளது தியாகத்தை பற்றி என்னிடம் கேட்கிறார்கள். இந்த வாழ்க்கை எனக்கு புதிது. உலகம் முழுவதும் பல சொந்தங்களை எனக்கு என் மகள் அள்ளித்தந்துவிட்டு போய்விட்டாள் என்று கூறி முடித்துள்ளார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்