தேர்தலில் எங்கள் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.. பாம்புக்கறி சாப்பிடுவேன்.. தேர்தல் முடிவுக்கு பின்னர் பேசிய சீமான்

Report Print Raju Raju in இந்தியா

எங்களை பொருத்தவரையில் மக்களவை தேர்தலில் எங்கள் கட்சிக்கு வெற்றி தான் கிடைத்துள்ளது என சீமான் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள பேட்டியில், இத்தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஆட்டோவில் வாக்குப் பெட்டியைக் கொண்டு வருகிறார்கள். சிறுவன் வாக்குபெட்டியைத் தூக்கிக்கொண்டு செல்வதையும், நட்சத்திர விடுதிகளில் வாக்கு எந்திரங்கள் உள்ளதையும் நாம் பார்த்தோம்.

பா.ஜ.க இங்கு வெற்றி பெறவில்லை என்பதால் எதையும் தமிழகத்துக்குச் செய்யமாட்டார்கள் என்று சொல்வது மக்களை அச்சுறுத்துவதற்காக உள்ளது.

மாட்டுக்கறியை வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், இங்கு இருப்பவர்கள் சாப்பிட்டால் அடித்துக்கொல்கிறார்கள்.

முதலில் எங்கள் உணவை உறுதி செய்யுங்கள். பிறகு எதை சாப்பிட வேண்டும் எனக் கூறுங்கள். நான் எந்தக் கறியையும் சாப்பிடுவேன். மாட்டுக் கறி பன்றிக் கறி பாம்புக்கறி எலிக்கறி தின்பேன் அது என்னுடைய விருப்பம்.

எங்களைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் எங்களுக்கு வெற்றிதான் கிடைத்துள்ளது.

ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் திமுகவை போட்டி போட சொல்லுங்கள்.

திமுகவும் தனித்து நிற்கவேண்டும், நாங்களும் தனித்து நிற்போம், அந்த சூழலில் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய நிலைமையே மக்களுக்கு வராது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers