மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம்.. மோடியின் முதல் 100 நாள் திட்டங்கள் இது தான்

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்கவுள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜீவ் குமார் கூறியதாவது, முதல் 100 நாட்களில் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தங்களை மோடி கொண்டுவருவார். வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான சீர்திருத்தம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்.

தொழிலாளர் சட்டங்களில் மாற்றம், தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள், மற்றும் புதிய தொழிற்துறை வளர்ச்சிக்கு நில வங்கிகள் உருவாக்கப்படுதல்.மேலும், ஏர் இந்தியா உட்பட அரசுக்கு சொந்தமான 42 நிறுவனங்களை மூடவும் வாய்ப்புள்ளது என ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால நரேந்திர மோடி ஆட்சியில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ம் திகதி கருப்பு பணத்தை திடீரென டிமானிட்டைசேஷனை அறிவித்தார். புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார் என்பது நினைவு கூறத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்