மக்களவையில் ஒலித்த தமிழ் பழம்பெரு இலக்கிய பாடல்.. மேசையை தட்டி வரவேற்ற மோடி

Report Print Basu in இந்தியா

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் மத்திய பட்ஜெட்டின் போது தமிழின் பழம்பெரு இலக்கியமான புறநானூறு பாடலை பாடி அசத்தினார். இதற்கு பிரதமர் மோடி மேசையை தட்டி வரவேற்றார்.

கடந்த 1970யில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, கூடுதல் பொறுப்பாக நிதித்துறையை கவனித்து வந்தார். ஆனால், தனி பொறுப்பாக முழு நேர பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேவையற்ற வரிவிதிப்புக்கு பிசிராந்தையாரின் புறநானூறு பாடலை மேற்கோள் கட்டி விளக்கம் அளித்தார்.

மக்களவையில் அனைவரும் புறநானூறு பாடலை கேட்க ஆர்வமாக இருந்தனர். பாடலை கேட்டு இந்திய பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உட்பட அனைவரும் மேசையை தட்டி வரவேற்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...