கருவிலே சிதைந்த 3 குழந்தைகள்.. நான்காவது பிறந்த குழந்தையை கொன்ற தாய்: கணவர் அளித்த வாக்குமூலம்

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் பிறந்து மூன்று மாதங்களான குழந்தையை பெற்ற தாயே, மருத்துவமனையின் ஜன்னலின் வழியே தூக்கி எறிந்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். தினக்கூலியான சாந்தியின் கணவர் ராஜன் சிங் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரை அடுத்து சாந்தியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் பொலிசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த சாந்தி உணர்வற்ற நிலையில் இருந்துள்ளார். சாந்தியின் கணவர் ராஜன் கூறியதாவது, மூன்று முறை கருச்சிதைவுகளால் பாதிக்கப்பட்ட மனைவி மன அழுத்தத்திற்கு உள்ளானார்.

கடந்த ஏப்ரல் 23ம் தேதி நான்காவதாக பிறந்த குழந்தை, கல்லீரல் நோய், மஞ்சள் காமாலை, பியோஜெனிக் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றால் அவதிப்பட்டதால் சாந்தி இன்னும் மன அழுத்தத்திற்கு உள்ளானார்.

மன அழுத்தத்தில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையை, மருத்துவமனையில் நான்காவது மாடியிலிருந்து ஜன்னல் வழியே தூக்கி வீசினார். இதில், குழந்தை பலியானது.

குழந்தையையின் நிலைமை மாறும் என மனைவியிடம் கூறினேன். ஆனால், அவர் இவ்வாறு செய்வார் என நான் சற்றும் நினைத்துக் கூட பார்க்கவில்லை என ராஜன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்