15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபர்.. தப்பிக்க முயன்றபோது நேர்ந்த கதி!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில், பாலியல் வன்புணர்வில் இருந்து தப்பிக்க நினைத்த 15 வயது சிறுமி, தலையில் காயமடைந்ததில் உயிரிழந்தார்.

நாமக்கல்லின் கொல்லிமலை அருகேயுள்ள கிராமம் வாழவந்திநாடு. இங்கு கடந்த 21ஆம் திகதி, 15 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராஜசேகர் என்ற இளைஞர் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.

அப்போது அவரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, குறித்த சிறுமியின் தலை சுவற்றில் மோதி உள் காயம் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து இரண்டு நாட்கள் கழித்து தனது பெற்றோரிடம் குறித்த சிறுமி தெரிவித்துள்ளார். உடனே அச்சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில் ராஜசேகரை, பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், சிறுமி உயிரிழந்ததால் அவர் மீதான போக்சோ வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்