கணவர் தூக்கில் தொங்கியதை பார்த்து தற்கொலைக்கு முயன்ற மனைவி: உயிருக்கு போராட்டம்

Report Print Vijay Amburore in இந்தியா

உத்திரபிரதேச மாநிலத்தில் கணவர் தூக்கில் தொங்கியதை பார்த்து தற்கொலைக்கு முயன்ற மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடி வருகிறார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் சாம்சங் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் சன்னி சின்ஹா (32). இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பிரியங்கா(30) என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை சின்ஹாவின் நண்பர் ஒருவர் பொலிஸாருக்கு போன் செய்து உடனடியாக அவருடைய வீட்டிற்கு செல்லுமாறு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சின்ஹா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மறுபுறம், மணிக்கட்டு பகுதியில் கத்தியால் கிழித்து ரத்தவெள்ளத்தில் பிரியங்காவும் கிடந்துள்ளார்.

உடனே பிரியங்காவை மீட்ட பொலிஸார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சின்ஹாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி, அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பிரியங்காவின் தந்தை பிரசாத் கூறுகையில், சம்பவம் நடைபெற்ற அன்று மாலை என்னுடைய மகள் வீட்டிற்கு வந்து அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பிய பிரியங்கா சிறிது நேரத்திலே எனக்கு போன் செய்து, உடனே என்னுடைய வீட்டிற்கு வாருங்கள் எனகூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

நான் வேகமாக அவர்களுடைய வீட்டிற்கு சென்ற போது பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers