நடிகர் ரஜினிகாந்தை நேரில் பார்க்க ஆசையாக சென்ற தீவிர ரசிகர் ஒருவர் ரூ.40,000-ஐ இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
ரஜினிகாந்தை நேரில் பார்க்க விரும்பிய அவரின் ரசிகர் பால கணேஷ் என்பவர் பாக்கெட்டில் 40 ஆயிரம் ரூபாய் பணத்துடன் அங்கு சென்றார். விவிஐபி நுழைவு வாயில் அருகே ரஜினிகாந்த் வந்தபோது, ரசிகர்கள் பலர் முண்டியடித்துக் கொண்டு ரஜினியுடன் செல்ஃபி எடுத்தனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாலகணேஷ் வைத்திருந்த பணத்தை பிக்பாக்கெட் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ரஜினிகாந்தை செல்போனில் படம் எடுத்து முடித்துவிட்டு பார்த்தபோது பாக்கெட்டில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டதை அறிந்து பால கணேஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார்
இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். பால கணேஷ் தனது தங்க நகைகளை அடமானம் வைத்து அந்த பணத்தை திரட்டியதாக தெரியவந்துள்ளது.