எனக்கு தெரியாமல் வெளிநாட்டுக்கு சென்ற மனைவி.. அங்கு அறையில் அடைத்து வைத்து.. கண்ணீர் விடும் தமிழர்

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டுக்கு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்ட தனது மனைவி அங்கு பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதாகவும் அவரை மீட்டு தரும்படியும் கணவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜி, (40) இவர் தனது மூன்று பிள்ளைகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து கண்ணீர் மல்க ஒரு புகார் கொடுத்தார்.

அதில், எனது மனைவி மங்கலட்சுமிக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் வெங்கடேசன், குமார், சங்கராபுரம் அண்ணாதுரை ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

இவர்கள் எனக்கு தெரியாமல், என் மனைவிக்கு விசா எடுத்து குவைத்துக்கு வீட்டு வேலைக்கு அனுப்பி விட்டனர்.

அங்கு சென்ற பின்னர் தான் மங்கலட்சுமி என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

என் மனைவி குவைத்துக்கு சென்று மூன்று மாதங்கள் முடிந்த நிலையில், கடந்த 29-ம் திகதி சகோதரியின் கணவர் சுதாகரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, வீட்டு வேலைக்கு என என்னை அழைத்து வந்தனர்.

ஆனால் என்னை 25 பெண்களுடன் ஒரு அறையில் அடைத்து வைத்து தவறான தொழிலில் ஈடுபடுத்த புகைப்படம் எடுப்பதாகவும், மறுத்தால் துன்புறுத்துவதாகவும் கதறியபடி மங்கலட்சுமி கூறியுள்ளார்.

இதையடுத்து வெளிநாட்டுக்கு என் மனைவியை அனுப்பிய குமாரை தொடர்பு கொண்டு, சுதாகர் கேட்டதற்கு, 2 லட்சம் ரூபாய் பணம் தந்தால் தான் திரும்ப அனுப்ப முடியும் என கூறியுள்ளார்.

எனவே என் மனைவியை மீட்டு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்