தினம்தோறும் சித்ரவதை... குடும்பத்தோடு சேர்ந்து காதலனை தீர்த்துக்கட்டிய காதலி

Report Print Vijay Amburore in இந்தியா

டெல்லியில் குடும்பத்துடன் சேர்ந்து காதலனை கொலை செய்த இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்த சுனில் என்கிற இளைஞர், அனிதா என்கிற இளம்பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

இது அனிதாவின் சகோதரன் சேத்ரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதற்கிடையில் காதல் ஜோடிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த அனிதா, காதலனை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுத்திருந்தார். ஆனால் அதற்கு சுனில் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அனிதா காதலனை கொலை செய்த முடிவெடுத்து, தன்னுடைய சகோதரனின் உதவியை நாடினார். ஏற்கனவே சுனில் மீது கோபத்தில் இருந்த சேத்ரி, இதற்கு சம்மதம் தெரிவித்து தன்னுடைய நண்பருடன் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.

அவர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகில், ஒரு ஓட்டலில் தங்கியிருந்த சேத்ரி, அனிதாவை கதவை திறந்து வைத்துவிட்டு வெளியில் செல்லுமாறு கூறியுள்ளான்.

உடனே அனிதாவும் கதவை திறந்து வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். இந்த சமயத்தில் வீட்டிற்குள் புகுந்த சேத்ரி, கத்தியால் சரமாரியாக குத்தி சுனிலை கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது மூன்று பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்