நண்பரின் மனைவியுடன் நெருக்கம்... கொன்று புதைத்துவிட்டு தலைமறைவு: வீடியோ வெளியிட்ட நபரால் பரபரப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் இளைஞரை கொன்று புதைத்த விவகாரத்தி.ல், குற்றத்தை ஒப்புக்கொண்டு வீடியோ வெளியிட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜகுமாரி என்ற பகுதியில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொல்லப்பட்ட ரிஜேஷ் என்பவரின் நண்பரான வசீம் என்ற இளைஞரே குற்றத்தை ஒப்புக்கொண்டு காணொளி வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் தாம் மட்டுமே குற்றவாளி எனவும், தற்போது விசாரணை கைதிகளாக் இருக்கும் தமது சகோதரனையும் நண்பர்களைவும் விடுவிக்க வேண்டும் எனவும் அவர் அதில் கோரிக்கை வைத்துள்ளார்.

இடுக்கி பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றின் மேலாளராக பணியாற்றி வந்த வசீம் கொல்லப்பட்ட ரிஜேஷின் மனைவியும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தங்களின் நெருக்கம் ரிஜேஷுக்கு தெரியவந்த நிலையில் இருவரும் சேர்ந்தே இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

ரிஜேஷை கொலை செய்த பின்னர், குடியிருப்பின் அருகாமையில் உள்ள ரிசார்ட் பகுதியில் கோணிப்பையில் கட்டி சடலத்தை புதைத்துள்ளனர்.

தலைமறைவான வசீமும் ரிஜேஷின் மனைவி லிஜி தொடர்பில் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய நிலையிலேயே வசீம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரிஜேஷின் மறைவுக்கு பின்னால் அவரது மனைவி லிஜி மற்றும் வசீம் ஆகிய இருவரும் மாயமானதாக தெரியவந்த நிலையில் குடும்பத்தினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்தே நாட்டை உலுக்கிய இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நண்பரின் மனைவியை அடைய நண்பரையே கொன்று புதைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்