கொரோனா சிகிச்சை பெற்று வந்த என் கணவரை எங்கே? மருத்துவமனை நிர்வாகத்தின் பதிலால் அதிர்ச்சியில் உறைந்த மனைவி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில்,கொரோனா சிகிச்சை பெற்று வந்த கணவரை காணவில்லை என்று மனைவி புகார் கொடுத்த நிலையில், அதற்கு மருத்துவமனை நிர்வாகம் அளித்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு காரணமாக அங்கிருக்கும், காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் சேர்ந்த அவருடைய இரண்டு மகள்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து, கடந்த 16-ஆம் திகதி மூன்று பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களுக்கு முன்னதாக அப்பெண்ணின் கணவர் கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் ஒன்றில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதன் பின், ஏப்ரல் 30-ஆம் திகதி அவரும் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்வில்லை.

இதனால் கொரோனா சிகிச்சை பெற்று வந்த தனது கணவரை காணவில்லை என தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி.ராமாவிடம் டுவிட்டரில் அப்பெண் புகார் அளித்தார்.

இதையடுத்து, அப்பெண்ணின் கணவர் இறந்துவிட்டதாகவும், அவரை கடந்த மே 1-ஆம் திகதி அன்று தகனம் செய்துவிட்டதாகவும், இது குறித்து அந்த நபரின் குடும்பத்தினரிடம் உரிய தகவல் தெரிவித்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

அப்பெண் காரணமின்றி மருத்துவமனை நிர்வாகம் குற்றச்சாட்டுகளை வைப்பதாக கூறியுள்ளது. ஆனால் அவரோ தன் கணவர் தகனம் செய்யப்பட்டதை அறிந்து பெரும் அதிர்ச்சியில் உள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்