என்னை இரண்டாக வெட்டினால் தான் இது நடக்கும்! நாம் தமிழர் கட்சி பிளவு குறித்து சீமான் தெளிவான விளக்கம்

Report Print Santhan in இந்தியா

நாம் தமிழர் கடசியில் பிளவு என்றால், அது என்னை இரண்டாக வெட்டினால் மட்டுமே என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சீமானின் நாம் தமிழர்கள் கட்சியில் இருந்து முக்கிய நபர்கள் விலகல் காரணமாக, அந்த கட்சி இரண்டாக உடைகிறது என்று கடந்த சில தினங்களாகவே சமூகவலைத்தளங்கள், ஒரு சில ஊடகங்களில் செய்தியாகவும் வெளியானது.

குறிப்பாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான கல்யாணசுந்தரம் வெளியேறப்போவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அக்கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜீவ் காந்தி அக்கட்சியிலிருந்து விலகுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளனார்.

இதனால் நாம் தமிழர் கட்சியில் பிரச்சனை, கட்சி இரண்டாக உடைகிறது, பிளவு என்றெல்லாம கூறப்பட்டது.

இது குறித்து சீமான், தன்னை இரண்டாக வெட்டினால் மட்டுமே நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், கட்சிக்கு உள்ளே நிறைய பேர் வருவார்கள், போவார்கள். ஒரு சிலருக்கு முரண்பாடு இருக்கும், இதன் காரணமாக அவர்கள் வெளியேறுவார்கள், இல்லையென்றால் வெளியேற்றப்படுவார்கள், இது எல்லாம் அனைத்து கட்சியிலும் இருக்கும் ஒன்று தான்.

இதை வைத்து கட்சியில் பிளவு என்று கூறுவது, வேடிக்கையாக இருக்கிறது. பிளவு என்றால், உதாரணமாக திமுகவில் இருந்து வைகோ விலகிய போது நடந்தது ஒரு பிளவு, அது மாதிரியான ஒரு பிளவு இங்கு இல்லையே, போகிறவர்கள், போகட்டும், தனியாக கூட கட்சி ஆரம்பிக்கட்டும்.

என்னை இரண்டாக வெட்டினால் மட்டுமே கட்சியில் பிளவு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்