ஹத்ராஸ் கொடூரம்: மரணமடைந்த சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சென்று மிரட்டிய மாவட்ட நீதிபதி: கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Basu in இந்தியா

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் நாடு தழுவிய அளிவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை உத்தர பிரதேச பொலிசார் கடுமையாக தாக்கி கைது செய்துள்ளனர்.

இதனிடையே, மரணமடைந்த 19 வயதான பட்டியலின சிறுமியின் குடும்பத்தினருக்கு ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பிரவீன் குமார் லக்ஸ்கர் நேரில் சென்று மிரட்டல் விடுத்தது கமெராவில் சிக்கியுள்ளது.

வெளியான வீடியோவில், மாவட்ட நீதிபதி பிரவீன் லக்ஸ்கர் சிறுமியின் தந்தையிடம், இன்று பாதி ஊடகத்தினர் வெளியேறிவிட்டனர், மீதமுள்ள ஊடகத்தினர் நாளைக்குள் புறப்படுவார்கள்.

நாங்கள் மட்டுமே இருப்போம். சம்பவம் தொடர்பான அறிக்கையை மாற்ற விரும்புகிறீர்களா இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

ஏற்கனவே சிறுமியின் முகத்தை கூட குடும்பத்தினரிடம் காட்டாமல் இரவோடு இரவாக எரியூட்டியதற்கு ஹத்ராஸ் மாவட்ட நிர்வாகம் மற்றும் உத்தர பிரதேச காவல்துறை கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இதற்கு மத்தியில் ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டியுள்ளது, நீதித்துறை அரசாங்கத்தின் கைகூலியா? இந்தியா பெண்கள் குழந்தைகள் வாழ தகுதியற்ற நாடா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்