திருமணம் ஆன 20 நாட்களிலே பிரிந்து சென்ற மனைவி! பழிவாங்குவதற்காக கணவன் செய்த மோசமான செயல்

Report Print Gokulan Gokulan in இந்தியா

தமிழகத்தில் திருமணம் ஆன 20 நாட்களிலேயே பிரிந்து சென்ற மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த கணவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மதுரை சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவருக்கும் கன்னியாகுமரி தக்கலையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ராஜமுருகன் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர், குடிபோதையில் ராஜமுருகன் மனைவியை கொடுமைப்படுத்தியதால், ரம்யா திருமணமான 20-வது நாளிலேயே தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ராஜமுருகன், அவரை பழிவாங்க தனது மனைவி என்று கூட பாராமல் ரம்யாவின் புகைப்படத்தை மிக ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி, மனைவியின் பெற்றோர்களுக்கும் அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி ரம்யா, கணவன் ராஜமுருகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ரம்யாவின் புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார் ஆறுமாதகாலமாக தலைமறைவாக இருந்த ராஜமுருகனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்