நடிகர் ரஜினி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த அறிவிப்பு குறித்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த், அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்.
இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்.
— சீமான் (@SeemanOfficial) December 29, 2020
அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன்!
அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று விடுதலை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ரஜினி வரட்டு கவுரவம் பார்க்காமல் இந்த முடிவை எடுத்திருப்பதை வரவேற்கிறேன், இதே போன்று அதிமுகவை சேர்ந்த சிலர் அவர் உடல்நிலை குறித்து இந்த முடிவை எடுத்துள்ளதால் இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.