நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் amazon: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in வேலைவாய்ப்பு

உலக அளவில் முன்னணி மின் வியாபார நிறுவனமாக amazon திகழ்ந்து வருகின்றது.

அத்துடன் amazon ஆனது இணைய சேவையினையும் வழங்கி வருகின்றது.

இந்நிறுவனம் தற்போதும் தனது புதிய கிளைகளை பல்வேறு நாடுகளில் திறந்து வருகின்றது.

இந்த வரிசையில் ஜேர்மனியின் முனிச் நகரில் புதிய அலுவலகம் ஒன்றினை திறக்கவுள்ளது.

இங்கு பணியாற்றுவதற்கு சுமார் 500 பணியாளர்களை உள்வாங்க தீர்மானித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள பயனர்களுக்கு இலகுவானதும், விரைவானதுமான சேவையை வழங்குதவற்காகவே இப் புதிய அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளவுட் கணினி வலையமைப்பு தொடர்பிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்த அலுவலகம் கண்காணித்து தீர்வுகளை வழங்கிவரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்