Apple Card எப்போது அறிமுகமாகின்றது? இதோ வெளியானது புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

வங்கிகள் வழங்கும் கிரடிட் கார்ட்களுக்கு நிகராக தனது கார்ட்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இக் கார்ட் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்களை பயனர்கள் தவணைக் கொடுப்பனவு முறைகளில் இலகுவாக வாங்க முடியும் என தெரிகிறது.

அத்துடன் வங்கிகளில் வழங்கப்படும் கிரடிட் கார்ட்களை விடவும் குறைந்த வட்டி வீதம் உட்ட மேலும் பல அனுகூலங்களை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கார்ட்டினை பெற விரும்புவர்கள் ஆப்பிள் வால்லட் ஆப் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

எவ்வாறெனினும் இக் கிரடிட் கார்ட் ஆனது அமெரிக்காவிலேயே முதன் முதலாக அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers