எவரும் நினைத்திராத அற்புதமான வசதியுடன் அறிமுகமாகும் சாம்சுங் ஸ்மார்ட் கடிகாரம்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
97Shares

மொபைல் சாதனங்களில் ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட பின்னர் கைக்கடிகாரங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டன.

இதற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு தற்போது கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள Samsung Galaxy Watch 3 கடிகாரத்தில் அற்புதமான இரு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று gesture control என்பதாகும்.

அதாவது கை அசைவுகளின் மூலம் கடிகாரத்தினை இயக்க முடியும்.

இவ் வசதியானது ஏற்கணவெ மொபைல் சாதனங்களில் தரப்பட்டுள்ளது.

இதனை விடவும் fall detection எனும் மற்றுமொரு புதிய வசதியும் தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறித்த கடிகாரத்தினை கட்டியிருக்கும் ஒருவர் தவறுதலாக கீழே விழுந்தால் 60 செக்கன்களுக்கு தொடர்ச்சியாக அலாரம் அடித்துக்கொண்டிருக்கும்.

குறித்த 60 செக்கன்களுக்குள் அவர் எழுந்திருக்கவில்லை எனின் அந்த நபரின் இருப்பிடத்தினை அவசர அழைப்பு இலக்கத்திற்கு தானாகவே அனுப்பிவிடும்.

மேலும் இக் கடிகாரமானது 41mm மற்றும் 45mm எனும் இரு அளவுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்