அதிகாலை விழிப்பதால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்!

Report Print Printha in வாழ்க்கை முறை

தினமும் அதிகாலை எழும்புவது என்பது இந்தகால இளைஞர்களுக்கு பொருந்தாத ஒரு விஷயமாக உள்ளது.

ஏனெனில் இரவு நேரங்களில் நண்பர்களுடன் அரட்டை, டிவி சீரியல் என்று அதிக நேரத்தை செலவிட்டு தூங்காமல் இருப்பதால் சிலரால் அதிகாலையில் விழிக்க முடியாமல் இருக்கிறது.

இதனால் உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றோம்.

ஆனால் தினமும் அதிகாலையில் விழிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளோ ஏராளம் இருக்கிறது.

  • தினமும் அதிகாலையில் எழும்புவதால், உங்களின் வேலைகளை அவசரமாக செய்வதை தவிர்த்து மிதமான வேகத்தில் எளிமையாக வேலைகளை பார்க்க முடியும். அதனால், உங்களுக்கு மன அழுத்தம் குறையும்.
  • அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், இரவில் நல்ல உறக்கத்தை கொடுக்கும். இதனால் அதிகாலையில் எழுந்து இரவு பத்து மணிக்குள் உறங்குவது மிகவும் ஒரு நல்ல பழக்கமாகும்.
  • அதிகாலை சூரிய உதயத்தின் போது, யோகா, நடைப்பயிற்சி போன்ற உடலுக்கு ஆரோக்கியமான உடற்பயிற்சிகளை செய்வதால், உடலும் மனமும் அதிக புத்துணர்ச்சியை பெறுகிறது.
  • மனதில் பதியவில்லை என்று கவலையுடன் படிக்கும் மாணவர்கள் அதிகாலையில் எழுந்து தினமும் படித்து வந்தால், நினைவாற்றல் அதிகரித்து, படித்தது என்றதும் மறவாமல் மனதிலேயே இருக்கும்.
  • அலுவலக பணிகளுக்கு செல்லும் பெற்றோர்களும் அதிகாலையில் விழித்து, உடற்பயிற்சிகளை செய்து வந்தால், அலுவலகத்தில் செய்யும் அவர்களின் பணி மிகவும் எளிமையாக இருக்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments