எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி உள்ளவர்கள் மீது காதல் வரும் தெரியுமா?

Report Print Jayapradha in வாழ்க்கை முறை

எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி உள்ளவர்கள் மீது காதல் வரும் என்று ஜோதிடம் கூறுவதை பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் காதல் உணர்ச்சி உள்ளவர்கள் என்றாலும் கூட நீண்ட கால உறவின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை.மேஷம் ராசியில் பிறந்த பெண்களுக்கு சிம்மம் அல்லது விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் மீது காதல் கொள்வார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் எல்லாம் நிலையாக, நம்பகமான மற்றும் பழமைவாத நபர்களாக இருப்பார்கள். ரிஷபம் ராசியில் பிறந்த பெண்களுக்கு, கடகம் அல்லது துலாம் ராசியில் பிறந்தவர்கள் மீது காதல் வருமாம்.

மிதுனம்

துணையின் தேவைக்கேற்ப தங்களின் தேவைகளை சுலபமாக மாற்றிக் கொள்ளும் குணத்தை கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள் மிதுனம் ராசியில் பிறந்த பெண்கள், கன்னி ராசியில் பிறந்தவர்களை காதலிப்பார்களாம்.

கடகம்

காதல் உணர்வுடன் கூடியவர்களான கடக ராசிக்காரர்கள் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.கடக ராசிகாரர்களுக்கு ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் போன்ற ராசிகாரர்களை காதல் செய்வார்கள்

சிம்மம்

தீவிர அன்பான மற்றும் உண்மையான துணையாக விளங்குவார்கள் சிம்ம ராசிக்காரர்கள். சிம்மம் ராசியில் பிறந்த பெண்களை கன்னி அல்லது துலாம் ராசியில் பிறந்தவர்கள் காதலிக்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் நம்பகமாக, வசீகரத்துடன், நடைமுறை குணத்தோடு இருப்பவர்கள். கன்னி ராசி பெண்களுக்கு மிதுனம் அல்லது மீனம் ராசி உள்ள ஆண்கள் காதலை கூறினால் அந்த காதல் வெற்றி அடையும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் நேர்மையுடனும், நடுநிலைமையுடனும் இருப்பார்கள். துலாம் ராசி பெண்கள், மகரம் ராசி உள்ள ஆண்களை காதல் செய்தால், அந்த காதல் உறவு நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிகாரர்கள் அவர்களுக்கு வரும் துணையுடன் எப்பொழுதும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைப்பர். விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள், கடக ராசி உள்ள ஆண்கள் மீது தனி அன்பு செலுத்துவார்களாம்.

தனுசு

மிகவும் நேர்மறையானவர்களான தனுசு ராசிக்கார்கள் வாழ்க்கையின் மீது சுதந்திரமான பார்வையை கொண்டிருப்பார்கள். தனுசு ராசியில் பிறந்தவர்கள் மீனம் ராசி உள்ள ஆண்கள் காதல் செய்தால், அவர்களின் உறவில் கெமிஸ்ட்டி இருக்கும்.

மகரம்

கடுமையான மற்றும் பிரச்சனையில்லாத துணையாக விளங்குவார்கள் மகர ராசிக்காரர்கள். மகரம் ராசி பெண்கள் கும்பம் அல்லது மேஷம் ராசி உள்ளவர்களை காதலித்தால், அந்த காதல் வெற்றி அடையும்.

கும்பம்

தங்களுக்கும், தங்கள் துணைக்கும் உயரிய கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள் கும்ப ராசிக்காரர்கள். கும்பம் ராசியில் பிறந்த பெண்கள் தங்களின் காதல் உறவு நன்றாக இருக்க மேஷம் ராசி உள்ள ஆண்களை விரும்ப வேண்டுமாம்.

மீனம்

மீன ராசிக்காரர்கள். சந்தேகமே இல்லாமல் அவர்கள் விசுவாசமாக, அன்பை அள்ளி வழங்குபவராக இருப்பார்கள்.மீனம் ராசியில் பிறந்த பெண்கள் மகர ராசி உள்ள ஆண்கள் மீது தனி அன்பே வருமாம். இதனால் இவர்களின் காதல் உறவு நன்றாக இருக்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers