3 வருட காதல்: காதலரை மணந்த இளவரசி....கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

Report Print Deepthi Deepthi in மலேசியா
167Shares
167Shares
ibctamil.com

மலேசிய மன்னரின் மகள் தனது 3 வருட காதலரான டென்னிஸ் என்பவரை தந்தையின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

மலேசியாவின் ஜோகர் மாகாண மன்னரான சுல்தான் இப்ராஹீம் என்பவரின் ஒரே மகள் துன்கு துன் அமினா (31).

இவர், நெதர்லாந்தை சேர்ந்த டென்னிஸ் (28) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னல் ஒட்டல் ஒன்றில் வைத்து சந்தித்துள்ளார்.

டென்னிஸ் கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கிறார். இவர்கள் இருவருக்குள்ளும் முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்துள்ளது.

அமினாவின் விருப்பப்படி கிறிஸ்தவரான டென்னிஸ் முஸ்லிமாக மதம் மாறி, முகமது அப்துல்லா ஆனார்.

இவர்கள் திருமணம், மலேசியாவின் ஜோகர் பாருவில் நேற்று கோலாகலமாக நடந்தது.

இங்குள்ள அரண்மனையில் ஆடம்பரமாக நடந்த திருமண நிகழ்ச்சியில் அமீனாவுக்கு, டென்னிஸ் மோதிரம் மாற்றினார்.

அரண்மனைக்குள் நடந்த நிகழ்ச்சியில் 1,200 பேர் பங்கேற்றனர். வெளியில் இருந்தபடி, ஆயிரக்கணக்கானோர், பிரமாண்ட திரைகளில், திருமணத்தைக் கண்டுகளித்தனர். இந்த திருமணத்துக்காக ஜோகர் பாரு முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்