கர்ப்பப்பை கட்டிகளின் வகைகள்... சித்த மருத்துவத்தில் இருக்கும் அதற்கான தீர்வுகள்

Report Print Arbin Arbin in மருத்துவம்

தாய்மைக்கு முன்பும், தாய்மைக்கு பின்பும் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலிகளை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இதில் முக்கிய பிரச்னை கர்ப்பப்பையில் ஏற்படும் பைபிராய்டு எனப்படும் கட்டிகள்தான்.

பொதுவாக 25 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பைபிராய்டு கட்டிகள் ஏற்படும். 4 பெண்களில் ஒருவருக்கு இத்தகைய கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இந்த கட்டிகள் ஆண்டுக்கு ஒரு செ.மீ. அளவுக்கு வளரும் தன்மை கொண்டவை.

கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்பட்டால், அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் நேரத்தில் அதிக நேரம் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, மூச்சு திணறல், மயக்கம் வருதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும், முதுகு வலி, கால் உளைச்சல், அடி வயிறு வலி போன்றவையும் ஏற்படும்.

இது தொடர்பான விளக்கம் மற்றும் தீர்வினை வைத்தியர் யோகவித்தியா ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கியுள்ளார்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்