நெஞ்சு சளியை விரட்டியடிக்கும் வெற்றிலையின் எண்ணற்ற மருத்துவ குணங்கள்!

Report Print Nalini in மருத்துவம்

பொதுவாக நமது வீடுகளில் மரம், செடி, கொடிகள் வளர்ப்பது வழக்கம். விருட்சங்கள் வளர்ந்தால் நம் வீடு விருத்தியம்சத்துடன் திகழும் என்பது நம்பிக்கை. தெய்வீக மூலிகைகளாக விளங்கும் வெற்றிலை, துளசி, வேம்பு, வில்வம் போன்றவைகளை கண்டிப்பாக வளர்க்க வேண்டும்.

வெற்றிலை என்பது ஒரு மூலிகையாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். அதுமட்டுமின்றி தாம்பூலத்தில் இடம்பெறும் ஒரு மங்களகரமான பொருளும் கூட.

வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது. உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தை போக்குவதோடு, சிறுநீர் பெருக்கியாகவும் இருக்கிறது.

வெற்றிலையின் எண்ணற்ற மருத்துவ குணங்கள்

வலிகளுக்கும் நிவாரணி

வெற்றிலை அனைத்து வலிகளுக்கும் நிவாரணி ஆகும். வெட்டுக்கள், சிராய்ப்புகள், வீக்கம் என அனைத்திற்கும் வெற்றிலையை பயன்படுத்தலாம். வெளிப்புற காயங்களுக்கு வெற்றிலையை அரைத்து பசையாக்கி காயங்களின் மேல் தடவலாம், உட்புற வலிகளுக்கு வெற்றிலையை மென்றோ அல்லது சாராகவோ குடிக்கலாம். இதன்மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பசியை தூண்டுதல்

வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.

வயிற்றுப் புண் குணமாக

வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்னை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகிவரும்.

நெஞ்சு சளியை போக்க

ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.

வெற்றிலை நன்கு கசக்கி அதன் சாறு துளிகள் எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சினால் தலைபாரம் மற்றும் சளி கரையும்.

இரும்புச் சத்து கிடைக்க

வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்