அமெரிக்க ஏன் ஈரானை தாக்கவில்லை தெரியுமா? பின்னணி உண்மையை உடைத்த ஈரான்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரான் மீது முன்னெடுக்கப்படவிருந்த இராணுவ தாக்குதலை, அமெரிக்கா கைவிட்டதற்கான காரணத்தை ஈரானிய உளவுத்துறை அமைச்சர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

உள்ளுர் ஊடகத்திற்கு பேட்டியளித்த ஈரானின் உளவுத்துறை அமைச்சர் மஹ்மூத் அலவி, ஈரானின் இராணுவ சக்தியைப் பார்த்து அமெரிக்காவினர் பயந்துவிட்டார்கள். அதுதான் ஈரானைத் தாக்கும் முடிவை ரத்து செய்வதற்கான முடிவின் பின்னணியில் உள்ளது.

மேலும், அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே, இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு, ஈரான் உயர்தலைவர் அனுமதி அளித்துள்ளதாக ஈரானின் உளவுத்துறை அமைச்சர் கூறினார்.

ஈரான், அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை யூன் 20 ம் திகதி வீழ்த்தியதற்கு பதிலடி கொடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இராணுவ தாக்குதலை ரத்து செய்ததாக டிரம்ப் கடந்த மாதம் கூறினார், ஏனெனில் அது 150 பேரைக் கொன்றிருக்கலாம், மேலும் அவர் ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு நடத்த விரும்பவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச யுரேனியம் செறிவூட்டல் அளவு அதிகமாக இருக்கும் என்று ஈரான் உறுதி அளித்ததை அடுத்து, ஜனாதிபதி டிரம்ப் ஈரானை எச்சரித்தார்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் தோல்வியுற்ற மற்ற நாடுகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், அமெரிக்க பொருளாதாரத் தடைகளிலிருந்து ஈரானுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், பதிலளிக்கும் வகையில் செறிவூட்டல் வரம்பை மீறுவதற்கான முடிவானது எடுக்கப்பட்டதாக ஈரான் ஜனாதிபதி ரூஹானி கூறினார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...