சிரியாவில் துருக்கி ராணுவம் கோர தாண்டவம்.. லட்சக்கணக்கான மக்களுக்கு நேர்ந்த கதி

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சிரியாவில் துருக்கி படையினர் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக போர் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு சிரியாவின் குர்திஷ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு எதிரான துருக்கியின் தாக்குதலால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக போர் கண்காணிப்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

சிரியா மீது துருக்கி தாக்குதல் தொடங்கியதிலிருந்து 300,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வகத்தின் தலைவர் Rami Abdel Rahman கூறினார்.

வடகிழக்கு சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து துருக்கி தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியது.

தற்போது குர்திஷ் தலைமையிலான தன்னாட்சி நிர்வாகத்தால் வடகிழக்கு சிரியா நிர்வகிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் இந்த நடவடிக்கை ஐ.எஸ்-க்கு எதிரான போராட்டத்தில் முக்கிய கூட்டாளியாக இருந்த குர்திஷ் படைகளை கைவிடுவதாக விமர்சகர்களால் பார்க்கப்பட்டது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்