iPhone XR கைப்பேசியின் விலையை அதிரடியாகக் குறைத்தது ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in மொபைல்

இந்த வருடம் செப்டெம்பர் மாதமளவில் ஆப்பிள் நிறுவனம் iPhone XR எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் மாத்திரமே ஆகியுள்ள நிலையில் குறித்த கைப்பேசியின் விலையினை அதிரடியாகக் குறைத்துள்ளது.

எனினும் இவ் விலைக் குறைப்பானது ஜப்பானில் மாத்திரமே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் Docomo கைப்பேசி வலையமைப்பு வாடிக்கையாளர்கள் இந்த சலுகை விலையில் 24 மாத தவணைக்கட்டண முறையில் பெற்றுக்கொள்ள முடியும்.

அறிமுகம் செய்யப்பட்ட தருணத்தில் 320 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட இக் கைப்பேசி தற்போது 230 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் அன்லாக் செய்யப்பட்ட iPhone XR கைப்பேசியானது ஜப்பானில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் 750 டொலர்கள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers