Samsung Galaxy S11 கைப்பேசி தொடர்பாக வெளியான தகவல்

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனமானது ஒவ்வொரு வருடமும் Galaxy S தொடரிலான கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் வரிசையில் அடுத்த வருடம் Galaxy S11 கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசி தொடர்பான ஊகங்களும், தகவல்களும் வெளியாக ஆரம்பித்துள்ளன.

இதன்படி இக் கைப்பேசியில் 108 மெகாபிக்சல்களை கொண்ட கமெரா சென்சார் தரப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன் மூலம் மிகவும் வெளிச்சம் குறைவான இடங்களையும் துல்லியமாக படம்பிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர 6K வீடியோக்களையும் பதிவு செய்யக்கூடியதாக இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers