தற்போது உலகில் எத்தனை ஐபோன்கள் பயன்பாட்டில் உள்ளது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனமானது ஐபோன்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்து இவ் வருடத்துடன் 13 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

அதாவது முதலாவத ஐபோனை 2007 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது.

அன்றிலிருந்து இன்றுவரை சுமார் ஒரு பில்லியன் வரையான ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவலை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டிம் குக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆண்டுதோறும் 20 மில்லியன் தொடக்கம் 30 மில்லியன் வரையான ஐபோன்கள் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் புதிய ஐபோன் பயனர்களுக்கான விற்பனையானது 20 சதவீதத்திலும் குறைவாகவே இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது புதிய பயனர்களை விடவும் ஏற்கணவே ஐபோன்களை வைத்திருப்பவர்களே புதிய ஐபோன் மொடல்களை அதிகமாக கொள்வனவு செய்கின்றனர்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்