பிரபஞ்சத்தின் மிக கொடூரமான தந்தை கொல்லப்பட்டார்: உலகையே சோகத்தில் ஆழ்த்திய வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

சிரியாவில் 7 மற்றும் 9 வயது மகள்களை தற்கொலை தாக்குதல்தாரியாக மாற்றி வெடித்து சிதற வைத்த கொடூர தந்தை கொல்லப்பட்டுள்ளார்.

டமாஸ்கஸ் புறநகரான Teshreen பகுதியல் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் Abu Nimr என்றழைக்கப்படும் Abdul Rahman Shaddad கொல்லப்பட்டதாக சிரியாவில் கண்காணித்து வரும் மனித உரிமை குழு அறிவித்துள்ளது.

சமீபத்தில் சிரியாவில் பெற்றோர்கள் தங்கள் 7 மற்றும் 9 வயது மகள்களை முத்தம் கொடுத்து தற்கொலை தாக்குதலுக்கு அனுப்பி வைத்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோ பதிவு செய்யப்பட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு 7 வயது சிறுமி உடம்பில் வெடிகுண்டு பெல்ட் அணிந்து டமாஸ்கஸில் உள்ள பொலிசில் நிலையத்தில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டார். இதில் மூன்று பொலிசார் காயமடைந்துள்ளனர்.

தற்போது, குறித்த வீடியோவில் தந்தையாக தோன்றிய Abu Nimr கொல்லப்பட்டுள்ளார். அதற்கான புகைப்பட ஆதாரத்தை ரஷ்யாவின் பிரபல பத்திரிக்கை நிருபரான Lizzie Phelan வெளியிட்டுள்ளார்.

குரான் வாக்குறுதியில் ஜிகாதி அல்லது புனித போரில் இறப்பவர்கள் பரலோகத்தில் தியாகியாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு 72 பெண்கள் அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதை பல இஸ்லாமிய தீவிரவாத போராளிகள் நம்புவதாக கூறப்படுகிறது.

ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதாவது, குரானில் உள்ள shuras ஒன்றை அவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments