நடுவானில் விமானத்தில் தூங்கிய விமானி: புகைப்படத்தை வெளியிட்ட பயணி

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்றில் பயிற்சி விமானியிடம் பணியை ஒப்படைத்து விட்டு முதன்மை விமானி இரண்டு மணி நேரம் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Pakistan International Airlines விமானத்தில் Amir Akhtar Hashmi என்பவர் விமானியாகவும் Ali Hassan Yazdani துணை விமானியாகவும் பணியாற்றி வருகின்றனர்.

துணை விமானி பயிற்சியில் இருப்பதால் அவரும் விமானிகளின் அறையில் அமர்ந்து விமானத்தை இயக்குவது எப்படி என கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், 304 பயணிகளுடன் சில தினங்களுக்கு முன்னர் இஸ்லாமாபாத்தில் இருந்து லண்டன் நகருக்கு விமானம் புறப்பட்டுள்ளது.

விமானம் நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது பயிற்சி விமானியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விமானி முதல் வகுப்பிற்கு சென்றுள்ளார்.

பின்னர், அங்கிருந்து இருக்கையில் படுத்துக்கொண்ட விமானி சுமார் இரண்டு மணி நேரம் தூங்கியுள்ளார்.

இருக்கையில் படுத்து விமானி தூங்கிக்கொண்டு இருந்தபோது பயிற்சி விமானி தான் விமானத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், முதன்மை விமானி தூங்கிக்கொண்டு இருந்ததை பயணி ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்த பிறகு விமானப்பணியாளர்களிடம் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு பின்னர், விமானம் பத்திரமாக லண்டனில் தரையிறங்கியது.

இவ்விவகாரம் ஆதாரப்பூர்வமாக தற்போது வெளியாகியுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து விரவான விசாரணை நடத்தப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments