இணையத்தை கலக்கும் ரஷ்ய சிறுமி: உலகின் மிக அழகான மொடல் இவரா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவின் 6 வயது சிறுமியை உலகின் மிக அழகான குழந்தை என இணைய பயன்பாட்டாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Anastasia Knyazeva என்ற குறித்த 6 வயது சிறுமியின் நடை உடை பாவனைகளுக்கு இணையத்தில் ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்னம் உள்ளது.

ரஷ்யாவில் தலைசிறந்த மொடல் சிறுமியாக வலம்வரும் இவர் அங்குள்ள பிரபலமான நிறுவனங்களுக்காக பணியாற்றியுள்ளார்.

பிரான்சில் Thylane Blondeau என்ற சிறுமி பல ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் கொண்டாடப்பட்டது போன்று தற்போது சிறுமி Knyazeva கொண்டாடப்படுகிறார்.

Knyazeva-ன் இஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை அவருக்கு 500,000 ரசிகர்கள் உள்ளனர். தனது தாயாரால் நிர்வகிக்கப்படும் குறித்த பக்கத்தில் பதிவேற்றப்படும்.

ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஏராளமான விருப்பங்கள் குவிந்து வருகிறது. ரஷ்யாவில் சிறுமிகளுக்காக நடத்தப்படும் போட்டிகளில் கலந்துகொண்டு

விருதுகளையும் குவித்து வருகிறார் சிறுமி Knyazeva. எதிர்காலத்தில் ரஷ்ய மொடல் உலகை கண்டிப்பாக இவர் ஆட்சி செய்வார் என இவரது ரசிகர்கள் பெருமையுடன் தெரிவித்து வருகின்றனர்.

மட்டுமின்றி சிறுமி Knyazeva-ன் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்த பல சர்வதேச நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தில் பணிபுரிய அழைப்பு விடுத்து வருவதாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரபல ரஷ்ய சிறுமி மொடலான Kristina Pimenova(11) சர்வதேச நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தமாகி, அந்த நிறுவனம் சர்ச்சைக்குள்ளான விளம்பரங்களை வெளியிட்ட நிலையில் சிறுமியின் தாயார் குறித்த நிறுவனத்தில் இருந்து ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்