ரஷ்ய உளவாளிகள் வெளியிட்ட பகீர் தகவல்: உலக கிண்ண போட்டிகளுக்கு அச்சுறுத்தல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடும் அச்சுறுத்தல் எழலாம் என ரஷ்ய உளவாளிகள் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் கடும் பின்னடைவை எதிர்கொண்ட ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம், அதற்கு பழி தீர்க்கும் பொருட்டு ரஷ்யாவில் நடக்கும் உலக கிண்ண கால்பந்து போட்டிகளின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை தலைவர் Alexander Bortnikov எச்சரித்துள்ளார்.

இதுவரை ரஷ்யாவில் இருந்து சுமார் 4,500 பேர் சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்துள்ளதாகவும் கூறும் அவர்,

ரஷ்ய எல்லை நாடுகளில் உள்ள சுமார் 20,000 பேர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிரித்தானியாவின் போரிஸ் ஜோன்சன் உலக கிண்ண பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மாஸ்கோவில் நாளை ஆலோசனை நடத்த உள்ள நிலையில் குறித்த தகவலை Alexander Bortnikov வெளியிட்டுள்ளார்.

சமீப காலமாக பயங்கரவாதிகளின் அணுகுமுறை முற்றாக மாறியுள்ளதாக கூறும் அவர், பயங்கரவாத தாக்குதல்களுக்கு தங்கள் ஆதரவாளர்களை ஊக்குவித்து வருவதாகவும்,

இதனால் உளவுப்பிரிவுகளுக்கு தாக்குதல் தொடர்பாக கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கால தாமதமாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஊடுவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers