7 வயது சிறுமி கற்பழித்து கொலை: போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
571Shares
571Shares
lankasrimarket.com

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 7 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் மீது பொலிசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த வாரம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

குடியிருப்புக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டது கண்காணிப்பு கமெரா மூலம் தெரியவந்தது. இந்நிலையில், சிறுமியின் உடல் நேற்று இரவு சாதார் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், சிறுமி கற்பழித்து கொடூரமாக கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுமியை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை கலைக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் பொலிசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பொலிசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். அதன்பிறகும் போரட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் பொலிசார் கும்பலை நோக்கி சுட்டதில் இதில் இருவர் உயிரிழந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி ஷாபாஸ் ஷரிப் தெரிவித்தார்.

7 வயது சிறுமி கடத்தி கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்