13 வயது மகளின் கன்னித்தன்மையை விற்க முயன்ற தாய்: வசமாக சிக்கியது எப்படி?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் 13 வயது மகளின் கன்னித்தன்மையை கோடீஸ்வர தொழிலதிபருக்கு £19,000-க்கு விற்க முயன்ற தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் Chelyabinsk நகரை சேர்ந்தவர் இரினா கிளாட்கிக் (35), இவர் தனது 25 வயது தோழியுடன் தனது மகளை அழைத்து கொண்டு மாஸ்கோ நகருக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள கோடீஸ்வர தொழிலதிபரிடம் தனது மகளின் கன்னித்தன்மையை £19,100 விலைக்கு விற்று தொழிலதிபருடன் மகளை முதலிரவுக்கு அனுப்பவே அங்கு சென்றுள்ளார்.

தொழிலதிபரிடம் பணத்தை வாங்கி கொண்டு உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த போது அங்கு சோதனை பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் அவரையும், உடனிருந்த தோழியையும் கைது செய்தார்கள்.

இரினாவின் மகள் உடனடியாக பொலிசாரால் மீட்கப்பட்ட நிலையில் மாஸ்கோ நகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நடந்த அனைத்தையும் பொலிசாரிடம் இரினாவும், தோழியும் வாக்குமூலமாக அளித்துள்ளனர்.

பொலிசார் விசாரணையில் முன்னர் அழகி போட்டியில் இரினா கலந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், இலினாவும் அவர் தோழியும் உடலை விற்று பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்