மகள் கண் முன்னால் துடிதுடிக்க கொல்லப்பட்ட பெற்றோர்: பதறவைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
405Shares
405Shares
lankasrimarket.com

ரஷ்யாவில் நான்கு வயது சிறுமி கண் முன்னால் பெற்றோர் துடிக்க துடிக்க கொல்லப்பட்ட பின்னர் மகளும் நீரில் மூழ்கி கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோன்ஸ்டானின் லார்கோவ் (35) என்ற நபருக்கு கோடரீவா (32) என்ற மனைவியும் அரீனா (4) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சிறை அதிகாரியாக பணிபுரிந்த ராவின் சமர் (28) என்பவர் தனது காரை பரிமாற்ற முறையில் லார்கோவிடம் விற்க வந்துள்ளார்.

இதையடுத்து லார்கோ, கோடரீவா மற்றும் அரீனா தங்கள் காரில் இருந்த நிலையில் ரவீனும் அதில் ஏறியுள்ளார்.

Credit: east2west news

கார் அமைதியான கடற்கரை பக்கமாக சென்று கொண்டிருந்த போது தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி ரவீன் காரை நிறுத்த சொல்லியுள்ளார்.

பின்னர் காரிலிருந்து இறங்கிய ரவீன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி லார்கோவிடம் இருந்த பணத்தை கேட்டுள்ளார்.

இதற்கு லார்கோ மறுத்த நிலையில் அவரையும், அவர் மனைவி கோடாரீவாயையும் அரீனா கண் முன்னால் கொடூரமாக ரவீன் சுட்டு கொன்றுள்ளார்.

அந்த சமயத்தில் சிறுமி அரீனாவும் கார் உள்ளே பெற்றோருடன் இருந்த நிலையில் காரை ரவீன் கடலில் தள்ளியுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 2014-ல் நடந்த நிலையில் கொலைக்கு பின்னர் பொலிசார் காரை மீட்டுள்ளனர்.

காரில் இருந்த ரவீன் நீரில் மூழ்கி இறந்துள்ளார்.

இதையடுத்து மூன்று சடலங்களையும் கைப்பற்றிய பொலிசார் தலைமறைவாக இருந்த ரவீனை கைது செய்தனர்.

இந்நிலையில் தற்போது சிறையில் இருக்கும் ரவீனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் அலெக்சாண்டர் கூறுகையில் ரஷ்யாவில் மரண தண்டனை விதிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது.

ஆனால் நாட்டின் ஜனாதிபதி விளாதிமிர் புடின் மீண்டும் மரண தண்டனை சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

ரவீன் போன்ற குற்றவாளிகளுக்கு அதுவே சரியானது என கூறியுள்ளார்.

Credit: east2west news

Credit: facebook

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்