தாத்தாவை திருமணம் செய்து கொண்ட பேத்தி: உருக வைக்கும் காரணம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
545Shares
545Shares
lankasrimarket.com

சீனாவில் உடல்நிலை சரியில்லாத தனது தாத்தா எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்பதால் அவருடன் திருமண கோலத்தில் பேத்தி எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

Fu Xuewei(25) என்ற இளம் பெண் தனது தாத்தாவான Fu Qiquan (87)-யுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது தாத்தாவை திருமணம் செய்வது போன்ற போட்டோ ஷூட்டை Fu Xuewei நடத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தாத்தாவுக்கு கடந்த இரண்டாண்டுகளில் இரு முறை பக்கவாதம் ஏற்பட்டதோடு, கடுமையான இதய நோயும் உள்ளது.

Credit: Sina

அவர் எப்போதும் வேண்டுமானாலும் இறக்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

எனக்கு வருங்காலத்தில் திருமணமானவுடன் பிறக்கும் பிள்ளைகளுக்கு என் தாத்தா Fu Qiquan-ன் முகம் தெரியவேண்டும்.

இதோடு அவர் என் திருமணத்தை பார்த்த மாதிரியும் இருக்கும், அதற்காக இந்த போட்டோ ஷூட் நடத்தினேன் என கூறியுள்ளார்.

இளம் வயதிலேயே தனது பெற்றோர் விவாகரத்து வாங்கிவிட்ட நிலையில், தாத்தா தான் தன்னை வளர்த்து ஆளாக்கினார் எனவும் Fu Xuewei உருக்கத்தோடு கூறியுள்ளார்.

Credit: AsiaWire
Credit: Sina

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்