வெடித்து சிதறிய விமானம்! உயிரை காப்பாற்ற சாலையில் வந்து உதவி கேட்ட பயணிகள்: நெகிழ்ச்சி வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலே தீப்பிடித்து வெடித்துச் சிதறியதால், அதில் இருந்த பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அருகிலிருக்கும் சாலையில் வந்து உதவி கேட்டுள்ளனர்.

Aeroméxico விமானம் ஒன்று Guadalupe Victoria Durango சர்வதேச விமானநிலையத்திலிருந்து நேற்று மாலை உள்ளூர் நேரப்படி மாலை 4.00 மணியளவில் 97 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்டுள்ளது.

ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலே விமானத்தில் தீப்பிடித்தால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக 85 பேருக்கு காயம ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை எந்த ஒரு உயிரிழப்பும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் விமானம் விபத்தில் சிக்கியவுடன், அதிலிருந்து பயணிகள் சிலர் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அருகிலிருந்த சாலைக்கு வந்து உதவி கேட்டுள்ளனர்.

இதில் விபத்தில் சிக்கிய பைலட் ஒருவருக்கு அங்கிருக்கும் மக்கள் உதவி செய்து, காரில் அனுப்பிவிடுவது தொடர்பான நெகிழ்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் விபத்தில் சிக்கிய விமான 10 ஆண்டுகள் பழமையானது எனவும், எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்