எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வேண்டாம்: கண்ணீர் விட்டு கதறும் பிரபல மொடல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொலம்பியா நாட்டின் பிரபல மொடல் ஒருவர் தமது முன்னாள் காதலரால் ஏற்பட்ட துயரங்கள் தொடர்பில் அதிரவைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தமக்கு நேர்ந்த இந்த துயர சம்பவம் உலகில் எந்தப் பெண்ணுக்கும் இனி ஏற்பட கூடாது என்பதாலையே அந்த புகைப்படங்களை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொலம்பியாவின் பிரபலமான மொடல்களில் ஒருவர் 27 வயதான எஸ்ட்பானியா பெரேரா என்பவர். இவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது பலரது கவனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமது உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் எப்போது நடந்தது என குறிப்பிட மறுத்துள்ள மொடல் பெரேரா, கடந்த 2 ஆண்டுகளின் தாம் பட்ட துயங்களின் தொகுப்பு இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பணி நிமித்தம் அமெரிக்காவின் மியாமியில் தங்கியிருக்கும் அவர், தமக்கு நேர்ந்தது உலகின் எந்தப் பெண்ணுக்கும் ஏற்பட கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

முதலில் தம்மை உளவியல் ரீதியாக தமது முன்னாள் காதலர் துன்புறுத்தியதாக கூறும் அவர், பின்னர் அது கடுமையான சித்திரவதையில் கொண்டு சேர்த்தது என்றார்.

தமக்கு 24 வயது இருக்கும் போது இந்த துஸ்பிரயோகம் நடந்தது எனக் கூறும் பெரேரா, அந்த இரண்டு ஆண்டுகளும் எனது வாழ்க்கையின் துன்பியல் காலம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்