நான் கொலைகாரி... என்னை கைது செய்யுங்கள்: உயிர்த்தோழியை 40 முறை கத்தியால் வெட்டிக்கொன்ற பெண்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

விர்ஜினா மாகாணத்தின் Radford நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது உயிர்த்தோழியை 40 முறை கத்தியால் வெட்டிக்கொலை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

லூயிசா - அலெக்ஸா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள். ஒரே பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளனர். கடந்த ஆண்டின் இறுதியில் லூயிசா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், நாங்கள் இருவரும் ஆழமாக நேசிக்கிறோம், நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் கொலைசெய்யக்கூடாது என கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது தோழியை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் அலெக்ஸா இறந்துகிடக்க, எனது தோழியை நான் தான் கொலைசெய்தேன், நான் கொலைகாரி, என்னை கைது செய்யுங்கள் என லூயிஸா பொலிசாரிடம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு சம்பவத்தால் கல்லூரிக்கு அவமானம் என கல்லூரி செயலாளர் கூறியுள்ளார். தற்போது லூயிஸா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers