உறைய வைக்கும் கடும் குளிர்... 30 மணி நேரம் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை: இப்பொது எப்படி இருக்கிறது?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கடும் குளிரில் 30 மணி நேரம் போராடிய பச்சிளம் குழந்தையும் அதன் தாயாரும் மருத்துவ சிகிச்சை முடித்து குடியிருப்புக்கு திரும்பியுள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள Magnitogorsk பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் இடையே எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக பெரும் விடிவிபத்து ஏற்பட்டது.

கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி பகலில் நடந்த இச்சம்பவத்தில் 10 மாடிகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தது.

இதில் 39 பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தின் போது ஓல்கா என்ற இளம் தாயார் தமது 3 பிள்ளைகளுடன் 4-வது மாடியில் உள்ள தமது குடியிருப்பில் தூக்கத்தில் இருந்துள்ளார்.

திடீரென்று ஏற்பட்ட விபத்தில் அதிர்ந்துபோன ஓல்கா உடனடியாக தமது முதல் மகனை காப்பாற்றியுள்ளார்,

ஆனால் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அவரது பச்சிளம் குழந்தை அந்த இடிபாடுகளில் சிக்கியது.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்கும் நடவடிக்கைகளில் துரிதமாக களமிறங்கினர்.

ஆனால் குழந்தை வான்யா மட்டும் சுமார் 30 மணி நேர கடும் போராட்டத்திற்கு பின்னரே மீட்கப்பட்டது.

அப்போது குறித்த பகுதியில் -27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

கடும் துயரங்களுக்கு நடுவே சிக்கியிருந்த அந்த குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டது.

உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து 1,400 கி.மீ தொலைவில் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், குழந்தை வான்யாவுக்கு மூளையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. மட்டுமின்றி வலது கால் கடும் குளிர் காரணமாக உறைந்து போனதாகவும் தெரியவந்தது.

ஆனால் மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு பின்னர் எவ்வித பாதிப்பும் இன்றி குழந்தை வான்யா தற்போது அதன் தாயாருடன் குடியிருப்புக்கு திரும்பியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்